122 பயணிகளின் உயிரை பணயம் வைத்த விமானம்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து சூரிச் நகருக்கு வந்த விமானம் ஒன்று ஒற்றை இயந்திரத்துடன் பறக்க அனுமதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 13 ஆம் திகதி பாரிஸில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானமானது ஒற்றை இயந்திரத்துடன் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி ஒருபக்க இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எண்ணெய் கசிவு இருந்ததாகவும், அதனாலையே அந்த இயந்திரத்தை இயக்காமல் விட்டுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாரிஸின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகளுடன் சம்பவத்தன்று காலை 5.50 மணிக்கு இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

சுமார் 70 நிமிட பயணத்தினிடையே எந்த அசம்பாவிதத்திலும் குறித்த விமானம் சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, 122 பயணிகளின் உயிரை சுவிஸ் ஏர் விமானம் சேவை நிறுவனம் பணயம் வைத்துள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சுவிஸ் பாதுகாப்பு விசாரணை வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...