சுவிஸில் பயணிகள் ரயிலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்: தீவிர விசாரணைக்கு உத்தரவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
317Shares

சுவிட்சர்லாந்தின் Schwyz மண்டலத்தில் தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவர் ரயில் விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Schwyz மண்டலத்தில் உள்ள Rigi பகுதியில் திங்களன்று சுமார் 2.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்குள்ள ரயில் தண்டவாளத்தில் குற்றுயிராக கிடந்த 68 வயதான தென் கொரிய நாட்டவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் ஏன் ரயில் தண்டவாளத்தில் சிக்கினார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் மண்டல பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 பேர் கொண்ட தென் கொரிய சுற்றுலா பயணிகள் குழு ஒன்று Rigi Kulm முதல் Rigi Staffel பகுதிவரை நடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அதில் ஒருவர் மாயமாகியுள்ளதை எஞ்சியவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து மாயமான நபரை தேடும் பணியில் எஞ்சியவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள தென் கொரிய தூதரகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவியை நாடியுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்துள்ளதாகவும், இதனால் ரயில் வருவதை அந்த நபர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், இதனாலையே விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்