துப்பாக்கி குண்டுக்கு பலியான சுவிஸ் இளைஞன்: விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளது.

சனிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் Yverdon-les-Bains பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இருந்து குற்றுயிராக இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.

உடனடியாக பொலிசாருக்கும் அவசர மருத்துவ உதவிக்கும் தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக சம்பவப்பகுதிக்கு பொலிசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த இளைஞரை மீட்டு முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் காயத்தின் தன்மை காரணமாக குறித்த இளைஞர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், போதை மருந்து கடத்தல் தொடர்பில் அந்த இளைஞர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த வேளையில் அங்கிருந்து பலர் அவசர அவசரமாக வெளியேறியதாகவும், வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானதாகவும் நேரடி சாட்சியங்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Yverdon-les-Bains பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் இரண்டாவது கொலை சம்பவம் இது என தெரியவந்துள்ளது.

வெள்ளியன்று இரவு 31 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தாயாரை 28 வயதான அவரது காதலன் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்