சுவிஸில் அடித்து கொல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயார்: வெளியான பரபரப்பு தகவல்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் காதலனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

Vaud மாகாணத்தில் வெள்ளியன்று காலை பொலிசாரை அணுகிய 28 வயது இளைஞர் ஒருவர், தாம் காதலியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்தார்.

இதனையடுத்து அவர் அளித்த முகவரிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் இருந்து 31 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

கொலை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் விசாரித்த பொலிசார், துப்பாக்கி சத்தம் அல்லது அலறல் சத்தம் என எதையும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒரு முறை மட்டும் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பெண்மணிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். முதல் கணவரில் இருந்து இரட்டையர்களும், இரண்டாவது கணவரில் இருந்து 3 வயதேயான சிறுவனும் உள்ளனர்.

கொலைக்குற்றத்திற்கு கைதான இளைஞர் மூன்றாவது காதலன் என கூறப்படுகிறது. வேலை ஏதும் இல்லாத அந்த இளைஞர் போதை மருந்துக்கு அடிமையானவர் எனவும், குழந்தைகள் ஏதும் இல்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞருக்கு உளவியல் பிரச்னை இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அப்பகுதியில் உள்ள நபர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவத்தின்போது இரட்டையர்கள் தங்கள் தந்தையின் குடியிருப்புக்கு சென்றுவிட்டதாகவும், குடியிருப்பில் அப்போது அந்த 3 வயதேயான சிறுவன் மட்டுமே இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே அந்த பெண்மணியை கடுமையாக தாக்கிய இளைஞன், அவரை அடித்தே கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட பெண்மணியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்தால் மட்டுமே உண்மை காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்