சுவிஸ் பல்கலைக்கழகத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் செய்துகொண்ட ஒப்பந்தம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வாஷ்நெகர் சூரிச் பல்கலைக்கழகத்துடன் நிதி ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார்.

சூரிச் பல்கலைக்கழகம், ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வாஷ்நெகரின் USC Schwarzenegger இன்ஸ்டிடியூட் மற்றும் R20 சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒரு நிதிக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

அவர்களது ’Green Economy and Finance Initiative’ என்னும் திட்டம் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தின் பசுமை நிதித் திட்டங்களை கல்வி ஆராய்ச்சியுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அமைப்புகளும் தூய்மை ஆற்றலை முன் வைத்து உலகை பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக இணைந்து செயல்படும்.

திங்கட்கிழமை அர்னால்ட் ஸ்வாஷ்நெகர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வி ஆய்வை பசுமை நிதித்திட்டம் மற்றும் நிர்வாக மட்டத்திலுள்ள தலைமையுடன் இணைப்பதன் மூலம் பாரீஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இலக்கை அடைய முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நல்நோக்கம் கொண்ட மிக முக்கியமான இலக்குகளை கல்வி, அரசியல் தலைவர்கள், இலாப நோக்கமற்ற அமைப்புகள், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவை இணைந்து மட்டுமே அடைய முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சூரிச் பல்கலைக்கழகமும் தனது பங்கை ஆற்றுவதாக உறுதியளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...