சுவிஸ் கப்பலிலிருந்து கடத்தப்பட்ட பணியாளர்கள் விடுவிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கடந்த மாதம் சுவிஸ் வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த கப்பலின் உரிமையாளர் கப்பலைப் பிடித்து வைத்துக் கொண்ட கடற்கொள்ளையர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸல் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து அறிந்துகொள்வதற்காக விடுவிக்கப்பட்ட 12 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பேஸல் நகர நீதித்துறையினர் கடத்தல், சட்ட விரோதமாக பிடித்து வைத்தல், மற்றும் பிணைக்கைதிகளாக பிடித்தல் போன்ற குற்றங்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் யாரும் சுவிஸ் நாட்டவர்கள் இல்லை என்றாலும், சுவிஸ் கொடியைத் தாங்கிய ஒரு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதால் சுவிஸ் நீதித்துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கோதுமை கொண்டு சென்ற MV Glarus என்ற அந்த சரக்குக் கப்பல், Lagosக்கும் நைஜீரிய தலைநகரான Port Harcourtக்கும் இடையே பயணிக்கும்போது கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்தனர்.

அதில் பயணித்த 19 பேரில் 12 பேரை அவர்கள் பிணைக்கைதியாக பிடித்துச் சென்றனர். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் கைப்பற்றப்பட்ட கோதுமை திரும்பக் கொடுக்கப்படவில்லை.

பிணைக்கைதிகளை விடுவிக்க பணம் எதுவும் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers