வெகு சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் நாட்டில் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிஸ் நாட்டில் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் சுவிஸ் கிளையின், 5 வது தடவையாக நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டி இன்று (27.10.2018) வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

காலை ஒன்பது மணிக்கு மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து WTBF இன் சுவிஸ் கிளைத் தலைவர் திரு சஜீவன் தியாகராஜா அவர்கள் உரையினைத் தொடர்ந்து, திரு ரோமன் அவர்கள் போட்டி நிபந்தனைகள், விதிகளை விரிவாக விபரித்தார். அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியாது.

ஆண் பெண்களுக்கான தனிநபர், இரட்டயர் ஆட்டம், கலப்பாட்டம் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 40 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். நடை பெற்ற போட்டியில் அனைத்து இனத்தவரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனால் பல சுவிஸ் நாட்டவர்களும் இணைந்து விளையாடியது மகிழ்வாக இருந்தது.

விளையாட்டுகள் யாவும் தரமானதாக அமைந்திருந்ததுடன் WTBF இன் சுவிஸ் கிளை அழகான முறையில் ஒழுங்கமைத்திருந்தது குறித்து அனைவராலும் பாராட்டப்பட்டது.

இறுதி நிகழ்வாக பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. போட்டிகள் யாவும் இரவு ஏழு மணிக்கு நிறைவுக்கு வந்தன.

பரிசு பெற்றோர் விபரம்
Mens single Open :
 1. Sanmugalingam Delinson (VD)
 2. Manuel Sommerhalder (AG)
 3. Arulpragasam Vinoj (NW)
 4. Thiyagarajah Sujevan (LU)
 5. Luis Blunschi (LU)
Mens double Open :
 1. Kunam Lutharsanen (AG) / Manuel Sommerhalder (AG)
 2. Andavar Prakash (ZUG) / Thiyagarajah Jeyakumar (ZUG)
 3. Nagathambiran Kathirkaman (VD) / Sanmugalingam Delinson (VD)
 4. Kumbalingam Balaji (LU) / Sinnathurai Luxmikanth (LU)
Ladies single Open :
 1. Suseharan Jeyaselvi (ZH)
 2. Rajakumar Geeva (ZUG)
 3. Selvakumar Lavanja (ZUG)
 4. Vigneswaran Vinusia (AG)
Mixed double Open :
 1. Vigneswaran Vinusia (AG) / Sabanayagam Mathan (AG)
 2. Selvakumar Selvanayagam (ZUG) / Selvakumar Lavanja (ZUG)
 3. Panchalingam Sanjith (ZUG) / Ratnasigamani Sarandya (LU)
 4. Rajakumar Geeva (ZUG) / Selvakumar Piraveen (ZUG)

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers