எல்லா பக்கங்களிலும் இருந்தும் அச்சுறுத்துகின்றனர்: சுவிஸ் யூதர்கள் கவலை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுவிஸ் யூதர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிட்ஸ்பர்க் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக கொலைவெறித் தாக்குதலானது உலகின் எல்ல பக்கங்களிலும் இருந்தும் யூதர்கள் அச்சுறுத்தப்படுவதையே இது சுட்டிக்காட்டுவதாக சுவிஸ் யூத மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்பவர் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதியா என்பதல்ல, அனைவருமே யூதர்களை அச்சுறுத்தி தாக்குவதில் குறியாக உள்ளனர் என்றார்.

மட்டுமின்றி சமீப காலமாக இணையத்திலும் யூதர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள நிர்வாகிகள், சுவிஸிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் பட்டப்பகலில் சூரிச் நகரில் யூத நபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டார்.

இதில் ஒருவர் 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு யூலை மாதம் யூதர்கள் சிலரால் நபர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் பாஸல் பகுதியில் யூதர் ஒருவரது குடியிருப்புக்கு கல்லால் அடித்துள்ளனர்.

தொடர்ந்து 5 வாரத்தில் நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.

வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராபர்ட் பவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்