சுவிஸில் சம்பள பாக்கியை கேட்ட முன்னாள் ஊழியருக்கு ஏற்பட்ட நிலை: பொலிசார் நடவடிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸில் பல வார சம்பள பாக்கியை கேட்ட முன்னாள் ஊழியரை அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் 46 வயதான அந்த நபர்.

இவருக்கு கடந்த பல வாரங்களாக அந்த நிறுவனத்தினர் சம்பள பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமது சம்பளத்தை மொத்தமாக வழங்க வலியுறுத்தி அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவரை இவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த அதிகாரியின் அழைப்பை ஏற்று நிறுவனத்துக்கே சென்ற இவரை வாக்குவாதத்தின் இடையே அந்த நபர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்த காயம் ஏற்பட்ட அந்த நபர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட அந்த நிர்வாக அதிகாரி பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என துர்காவ் மாகாண பொலிசார் உறுதியளித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்