ஜெனீவாவில் 1800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

ஜெனீவா நகர தெருக்களில் 1800க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவிற்சர்லாந்தின் Canton Ticino பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தில் சுமார் 3000 தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது ஜெனீவா நகர தெருக்களில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட தொழிலார்கள் பங்கேற்றுள்ளனர். இதில் Unia, Synia மற்றும் SIT தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்று அணிவகுப்பாக செல்கின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மோசமான சூழ்நிலைகளிலும் தங்களை வேலைக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரு நல்ல கூட்டு ஒப்பந்தத்திற்கு வலியுறுத்தியும் கோஷமிட்டவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுமான துறையில் ஒரு புதிய தொழிற்சங்க உடன்படிக்கைக்கு தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், இந்த வேலைநிறுத்தம் சுவிற்சர்லாந்தில் ஒப்பீட்டளவில் அரிதான நிகழ்வு என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers