எங்கள் பணிப்பெண்களின் தகுதிக்கு இந்த சம்பளம் போதும்: விமான ஊழியர்களை அவமதித்த அதிகாரி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் விமான நிறுவனத்தின் இயக்குநர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விமானப் பணியாளர்களை அவமதிக்கும் விதத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் விமான நிறுவன இயக்குநரான Lorenzo Stoll பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கும்போது, விமானப் பணியாளர்களின் சம்பளம் குறித்த ஒரு கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த Lorenzo Stoll, எங்கள் விமானப் பணியாளர்களின் கல்வித்தகுதிகள் மிக அதிகம் இல்லை என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.

அவர்களுக்கு அதிக படிப்பு தேவையில்லை, நாங்களே அவர்களுக்கு பயிற்சியளித்து வேலை செய்வதற்கு அவர்களை தயார் செய்கிறோம் என்றார் அவர்.

Lorenzo Stollஇன் பேட்டி விமானப் பணியாளர்களிடையே ஒரு அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தியது.

அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள சுவிஸ் விமானப் பணியாளர்கள் யூனியனின் தலைவரான Denny Manimanakis, இது எங்களுக்கு பெருத்த அவமதிப்பு, கன்னத்தில் அறைந்தது போல் இருக்கிறது என்று கூறினார்.

பின்னர் தனது வார்த்தைகள் விமானப் பணியாளர்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கும் என்றால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக Lorenzo Stoll தெரிவித்தார்.

சுவிஸ் விமானப் பணியாளர்கள் மாதம் ஒன்றிற்கு செலவீனங்கள், உதவித்தொகைகள் உட்பட 4,000 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளமாகப் பெறுகிறார்கள்.

மத்திய வர்க்கத்தினரின் மாத சம்பளமாகிய 6,502 ஃப்ராங்குகளை விட விமானப் பணியாளர்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்