சிரித்துக் கொண்டே சக வீரரை கல்லால் அடிக்கும் ராணுவ வீரர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சக ராணுவ வீரர் ஒருவரை மற்ற வீரர்கள் சிரித்துக் கொண்டே கல்லால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் தனித்து ஒரு வீரர் நிறுத்தப்பட்டிருக்க உயர் பதவியிலிருக்கும் ஒருவர் உத்தரவிட்டதும் மற்ற வீரர்கள் அவர் மீது கற்களை எறிகின்றனர்.

பின்னர் கல்லால் அடிக்க உத்தரவிட்டவர் கோபத்துடன் அந்த வீரரிடம் ஏதோ கூறி விட்டு செல்கிறார்.

எதற்காக அவர்மீது கற்களை எறிந்தார்கள்? அவர் ஏதாவது குற்றம் செய்தாரா? என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

அது மட்டுமின்றி பழி வாங்கப்படலாம் என்ற அச்சத்தில், தான் தாக்கப்பட்டதாக அந்த வீரரும் புகாரளிக்கவில்லை.

ராணுவத்தினரிடையே பிரபலமான அந்த வீடியோ, பின்பு சமூக ஊடகங்களிலும் வெளியாக, தாக்கப்பட்ட அந்த வீரரின் தந்தை அந்த வீடியோவைப் பார்த்து விட்டு புகாரளித்ததால்தான் விடயம் வெளியில் வந்திருக்கிறது.

சம்பவ இடத்திற்கு ராணுவ தலைவர் சென்று விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ள ராணுவம், ராணுவத்தில் இத்தகைய தண்டனைகளுக்கு இடமில்லை என்றும், ராணுவ நீதித்துறை குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்