சுவிட்சர்லாந்தில் சக ராணுவத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்ட வீரர்: தந்தை அளித்த புகார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் சேர்ந்து சக வீரரை கல்லால் அடித்து தாக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனவும் ராணுவ அதிகாரிகள் தரப்பு உறுதியளித்துள்ளது.

பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அந்த காட்சிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி லூசெர்ன் மாகாணத்தில் உள்ள Emmen பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் ஆணின் குரல் ஒன்று, தயாரா என உறுதி செய்துவிட்டு, இப்போது தாக்குங்கள் என உத்தரவிடுகிறது.

இந்த உத்தரவை அடுத்து ராணுவ வீரர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர் ஒருவர் மீது கல்லால் தாக்குகின்றனர்.

குறித்த ராணுவ வீரரை ஏன் கல்லால் தாக்குகின்றனர் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தண்டனையில் இருந்து எவரும் தப்ப முடியாது எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் புகார் ஏதும் அளிக்கவில்லை எனவும்,

ஆனால் செவ்வாய் அன்று ஊடகங்களில் வெளியான குறித்த வீடியோ காட்சிகளை பார்க்க நேர்ந்த அந்த ராணுவ வீரரின் தந்தை ராணுவத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும்,

டிசினோ மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் நிலையை பாருங்கள் என முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்