சுவிட்சர்லாந்தில் சொந்த பேரனால் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: பொலிசார் விசாரணை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
140Shares

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாகாணத்தில் குடும்ப தகராறு காரணமாக சொந்த பேரனால் வயதான பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துர்காவ் மாகாணத்தின் Frauenfeld பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

செவ்வாய் அன்று மாலை குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் முன்னர் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பெண் ஒருவரின் அலறல் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அல்பேனிய நாட்டவர்களான அந்த குடும்பம், குறித்த பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

இருப்பினும், அக்கம்பக்கத்தினர் எவருக்கும் அவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

சம்பவம் நடந்த குடியிருப்பின் வலது பக்கம் அல்பேனியர்களுக்கான கலாச்சார விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

மட்டுமின்றி தாய்லாந்து உணவம் ஒன்றும் அப்பகுதியில் உள்ளன. அதில் குறித்த பெண்மணியின் மகன் ஒருவர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

பாடசாலை சென்றுவரும் அந்த இளைஞர் பகுதி நேர பணியாக குறித்த தாய்லாந்து உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மூத்த சகோதரரே கொலை செய்திருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த பின்னர் குடியிருப்பில் இருந்து மாயமானவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்