நோயுடன் பிறந்த குழந்தை: ஒரு மில்லியன் பிராங்குகள் இழப்பீடு கேட்டு மருத்துவர் மீது வழக்கு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
207Shares
207Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தமக்கு பரம்பரை நோயுடன் குழந்தை பிறந்ததாக கூறி மகப்பேறு மருத்துவர் ஒருவர் மீது இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். குறித்த மருத்துவர் பெற்றோர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை தவிர்த்ததாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய பரிசோதனைகளை அந்த மருத்துவர்கள் மேற்கொண்டிருந்தால் தமக்கு பரம்பரை நோயுடன் குழந்தை பிறந்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அந்த மருத்துவர், குறித்த பெண்மணி தமக்கு எவ்விதமேனும் குழந்தை வேண்டும் எனவும், தமது ஆரோக்கிய நிலை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனாலையே தாம் போதிய அவகாசம் மருத்துவ சோதனைகளுக்கு ஒதுக்கவில்லை எனவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் நீதிமன்றம், அந்த மகப்பேறு மருத்துவருக்கு தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் உண்மையான தகவல்களை தொடர்புடைய பெண்மணி அளித்தாரா என்பதை உறுதி செய்யும்படி கோரியுள்ளது.

தமக்கு பரம்பரை வியாதி இருப்பதை அறிந்து கர்ப்பத்தை கலைக்க அவர் மறுப்பு தெரிவித்திருந்தால், மகப்பேறு மருத்துவர் உரிய சோதனைகளை மேற்கொள்வதை தவிர்த்திருப்பது முறையான செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், சட்ட விதிகளின்படி நோயாளிகளின் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் போதிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

மட்டுமின்றி மகப்பேறு மருத்துவர்கள் கட்டாயம் குறிப்பிட்ட பரிசோதனைகளை கருவுற்ற பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த பெண்மணி ஒரு மில்லியன் பிராங்குகள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்