சுவிட்சர்லாந்திற்கு செருப்படி கொடுத்துள்ள ஸ்வீடன்: பரபரப்பு வீடியோ

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சை மையமாகக் கொண்டு செயல்படும் மகளிர் உரிமைகள் குழு ஒன்று, ஸ்வீடனில் பாலியல் தொழில் தடை செய்யப்பட்டுள்ள மாதிரியைப் பின்பற்றி, சுவிட்சர்லாந்திலும் தடை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் சுவிட்சர்லாந்திற்கு செருப்படி கொடுத்ததை போல் அமைந்துள்ளன.

பெண்களை மதிக்கும் ஒரு நாடு ஸ்வீடன், எங்கள் நாட்டில் பெண்களுக்கு 1921ஆம் ஆண்டில் வாக்குரிமை கொடுக்கப்பட்டது, ஆனால் சுவிட்சர்லாந்திலோ 1971இல் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள், அந்த வீடியோவில் பேசும் ஸ்வீடனைச் சேர்ந்தவர்கள்.

ஸ்வீடனில் ஒரு மனிதன் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு பணம் கொடுத்தால் அவனுக்கு அபராதம் விதிக்கப்படும், அவன் சிறைக்கும் செல்ல நேரிடலாம், ஆனால், உங்கள் நாட்டிலோ பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது.

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களில் 75 சதவிகிதம் பேர் அகதிகள்.

வீட்டு வேலை செய்வதற்காக என்று கூறி ஏமாற்றிக் கொண்டுவரப்பட்டு பின்னர் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள், இது எப்படி சட்டப்பூர்வமாகும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

சுவிட்சர்லாந்தில் பணம் வரவைக்கும் எல்லா தொழிலுமே சட்டப்பூர்வமானதுதான் என அவர்கள் கேவலமாக கூறும் விதம் செருப்பால் அடிப்பதுபோல்தான் உள்ளது.

அதே நேரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள், தங்களால் முடிந்தால், தாங்கள் பாலியல் தொழிலை விட விரும்புவதாக தெரிவித்துள்ளதாக கூறும் அந்த வீடியோ, சுவிட்சர்லாந்து மக்களே, இதற்காக தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் என்கிறது.

ஆனால், சுவிஸ் எய்ட்ஸ் கூட்டமைப்பு உட்பட பல குழுக்கள், பாலியல் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டால் திருட்டுத்தனமாக பாலியல் தொழில் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராக போராடுவது இன்னும் கடினமாகிவிடும் என்றும் தெரிவிக்கின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers