சுவிஸ்ஸில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு மாயமான மூவரை பிரான்ஸ் எல்லைப் பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதில் இருவர் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனவும், செவ்வாய் அன்று விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கைதான மூவர் மீதும் கலவரத்தில் ஈடுபடுதல், கொலைவெறித் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்டு 18 ஆம் திகதி ஜெனிவா இரவு விடுதி ஒன்றில் 5 பெண்கள் மீது கைதான இந்த மூவர் குழு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் இரு பெண்கள் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஒருவர் தற்போதும் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்கள் மீதான குறித்த தாக்குதலானது சுவிஸ் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன்,

4 முக்கிய நகரங்களில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட ஜெனிவா விசாரணை அதிகாரிகள், முக்கிய குற்றவாளிகளை மிக விரைவில் அடையாளம் கண்டனர்.

அடையாளம் காணப்பட்ட மூவரும் பிரான்ஸ் நாட்டவர்கள் எனவும், கண்காணிப்பு கமெரா, நேரடி சாட்சியம் என அனைத்தும் அந்த மூவருக்கு எதிராக அமைந்தது.

இதனிடையே பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிப்பதாகவும், ஆனால் சுவிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்