சுவிட்சர்லாந்து பள்ளிச் சுற்றுலாவில் திடீர் குழப்பம்: 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் Valais பகுதியில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் எதிர்பாராத பிரச்சினைக்குள்ளானார்கள்.

இரண்டு குளவிக் கூடுகளை அவர்கள் எதிர்பாராதவிதமாக சேதப்படுத்தியதால் குளவிகள் கூட்டமாக படையெடுத்து மாணவர்களைத் துரத்தின.

ஒரு மாணவனுக்கு 30 கொட்டுகள் விழுந்தன. கொட்டுப்பட்ட 25 மாணவர்களும் Visp பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மேலதிக பரிசோதனைகள் தேவைப்படும் இரண்டு மாணவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிக குளவிகள் காணப்படுவதாக உள்ளூர் தீயணைப்பு துறை தலைவர் Simon Vogler தெரிவித்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்