இஸ்லாமிய கல்வியாளருக்கு எதிராக பாலியல் வழக்கு விசாரணை: சுவிட்சர்லாந்து அதிரடி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா அதிகாரிகள் இஸ்லாமிய கல்வியாளர் ஒருவருக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியாக தவறாக நடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பிரான்சில் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல இஸ்லாமிய கல்வியாளரான Tariq Ramadan மீது இரு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜெனீவா ஹோட்டல் அறை ஒன்றில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக Tariq மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின்மீது முறைப்படி குற்றவியல் விசாரணை ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குற்றம் சாட்டிய பெண்ணின் வழக்கறிஞர் கூறும்போது, ஜெனீவா பொலிஸ் அதிகாரிகள் எனது கட்சிக்காரரின் புகாரை விரைந்து விசாரணைக்கு எடுத்துள்ளனர், இதுவே எனது கட்சிக்காரரின் குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உறுதி செய்கிறது என்றார்.

சுவிஸ் குடிமகனான Tariq, எகிப்தின் Muslim Brotherhood movement என்னும் இயக்கத்தை நிறுவியவரின் பேரனாவார்.

குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக சுவிஸ் அதிகாரிகள் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய Tariq, தன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தனது பணியை உதறினார்.

பிரான்சில், பாரீஸ் அருகில் சிறை வைக்கப்படுள்ள Tariq, காவலில் வைக்கப்பட்டுள்ளதால் தனது உடல் நலப்பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவது கடினமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் Tariq மீது குற்றம் சாட்டியுள்ள Christelle என்னும் இரண்டாவது பெண் முன்னிலையில் அவர் விசாரிக்கப்பட இருக்கிறார்.

மாற்றுத்திறனாளியான Christelle, 2009ஆம் ஆண்டு Lyon நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து Tariq தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers