ஆயுத குவியலுடன் சிக்கிய சுவிஸ் இளைஞர்: பயங்கரவாத தாக்குதலுக்கு முயற்சி?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஆயுதங்களுடன் சிரியா செல்ல முயன்ற சுவிஸ் இளைஞரை பல்கேரியா பொலிசார் கைது செய்து பயங்கரவாதி என அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் அன்று மாலை பல்கேரியா மற்றும் துருக்கி எல்லையில் குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் குறித்த சுவிஸ் இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.

சிரியாவின் Idlib நகருக்கு செல்ல இருப்பதாக தெரிவித்த அவரது வாகனத்தில் துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் 24 கத்திகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Idlib நகரை குறிவைத்து மாபெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மன்றமும் மீட்பு அமைப்புகளும் அச்சம் தெரிவித்திருந்த நிலையில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.

சிரியாவின் Idlib நகரானது துருக்கி எல்லையில் அமைந்துள்ளது. ஆயுதங்களை கைப்பற்றிய நிலையில், சுவிஸ் நாட்டவரிடம் விசாரணை மேற்கொண்ட பல்கேரிய அதிகாரிகளிடம், சிரியா பொதுமக்களுக்கு உதவும் நோக்கிலேயே தாம் அங்கு செல்ல முயன்றதாகவும், வேறு நோக்கம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞரின் தந்தை சுவிஸ் அதிகாரிகளிடம் தமது மகன் மாயமானது தொடர்பில் புகார் அளித்த நிலையிலேயே சுவிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை தகவல் வெளியிட்டிருந்தனர்.

தற்போது குறித்த இளைஞர் மீது ஆயுதம் கடத்தல், பயங்கரவாத சதித் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்கேரிய அதிகாரிகள் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers