இந்த ஆண்டில் 18,000 சுவிஸ் குடிமக்கள் புற்று நோயால் உயிரிழப்பார்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 56,000 பேருக்கும் அதிகமானோர் புற்றுநோய்க்கு ஆளாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையத்திற்கு அறிக்கை அளிக்கும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜன்சி அளித்துள்ள புள்ளிவிவரம் ஒன்றில், இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 18,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பார்கள் என்றும், அவர்களில் 10,300 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களில் பத்தில் ஒருவரும் பெண்களில் 7.4இல் ஒருவரும் 75 வயதுக்குமுன் புற்று நோயால் இறக்க இருக்கிறார்கள்.

ஐந்தில் ஒருவர் மெலனோமா அல்லாத தோல் புற்று நோய்க்கு ஆளாவார். மிக பயங்கரமான நுரையீரல் புற்றுநோய் இந்த ஆண்டில் 3,500 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 30,000 ஆண்களும் 26,000 பெண்களும் புற்றுநோய்க்கு ஆளாவார்கள்.

உலகம் முழுவதிலும் பார்க்கப்போனால் இன்னும் 20 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 61 சதவிகிதமாக உயரும் - அதாவது 30 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள், 16 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என உலக சுகாதார மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதில் பாதிக்கு பாதி, பாதிக்கப்பட இருப்பவர்கள் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் கால் பகுதி, அமெரிக்கர்களைப் பொருத்தவரையில் 21 சதவிகிதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள், 15 சதவிகிதத்திற்கும் குறைவானோர் உயிரிழப்பார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...