நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய நபர்! சில வருடங்களுக்கு பின் நிகழ்ந்த ஆச்சரியம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஓமானுக்கு சுற்றுலா சென்றபோது தண்ணீரில் மூழ்கித் தவித்த கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் காப்பாற்றினார்.

ஒன்றரையாண்டுகளுக்குப் பின் தன்னைக் காப்பாற்றியவரை தேடிக் கண்டுபிடித்தபோது அவர்களுக்குள் பல ஆச்சரிய ஒற்றுமைகள் காணப்பட்டன.

2017ஆம் ஆண்டு Suha தனது கணவருடன் ஓமானிலுள்ள அழகிய நீர் நிலைகள் நிறைந்த Wadi Shab என்னும் சுற்றுலாத்தலத்திற்கு சென்றிருந்தார்.

அங்கிருந்த அருமையான குகை ஒன்றினுள் நீந்த தொடங்கினார் Suha.

சமீபத்தில் மழை பெய்திருந்ததால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததை பின்னர்தான் உணர்ந்திருக்கிறார் அவர்.

தண்ணீர் இழுக்க, அதை எதிர்த்து நீந்த இயலாத நிலையில் மூழ்கத் தொடங்கியிருக்கிறார் அவர்.

தனது மனைவி மூழ்குவதைக் கண்ட Suhaவின் கணவர் எனது மனைவியைக் காப்பாற்றுங்கள் என கத்தியிருக்கிறார்.

அப்போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. எங்கிருந்தோ வந்த ஒரு பெண்மணி மிக வேகமாக நீந்திச் சென்று Suhaவை இழுத்துக் கொண்டு கரைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.

தன்னை விட்டு கடந்து போகும் அந்த பெண்ணிடம் உங்கள் பெயர் என்ன, உங்களுக்கு எந்த ஊர் என்றும் கேட்க, அவர் தன் பெயர் Patrizia என்றும் தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அவர் மட்டும் தன்னைக் காப்பாற்றியிராவிட்டால் தான் இன்று உயிருடன் இருக்க மாட்டோம் என்று எப்போதும் எண்ணும் Suha ஒன்றரையாண்டுகளுக்குப்பின் தன்னை மீட்டவரைக் கண்டு பிடிக்க முடிவு செய்தார்.

சமூக ஊடகங்களில் நடந்த சம்பவத்தை பதிவிட்ட Suha, பதில் வருமா என காத்திருந்த நிலையில் Patriziaவின் தோழி ஒருவர் அந்த செய்தியை படித்துவிட்டு இருவரும் சந்திக்க உதவியிருக்கிறார்.

சமீபத்தில் சில நாட்களுக்கு முன் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் Patriziaவை சந்தித்தார் Suha.

அவர்கள் சந்தித்தபோதுதான் ஒரு ஆச்சரிய உண்மை தெரிய வந்திருக்கிறது, அதாவது 33 வயதாகும் இருவரும் ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில், ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதுதான் அது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்