சுவிஸ்ஸில் குப்பைத்தொட்டியை கழிவறையாக பயன்படுத்தும் ரயில் பயணிகள்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் சுகாதாரம் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் BLS நெட்வொர்க்கானது தினசரி 1000 ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் பேணப்படும் சுகாதார நடவடிக்கைகள் என்ன என்பதும், பயணிகள் அதை கடைபிடிக்கிறார்களா என்பது குறித்தும் அந்த நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ரயிலும் 3-ல் இருந்து நான்கு முறை தினசரி சுத்தம் செய்யப்படுகிறது. இது கால அட்டவணையை பொறுத்து ஆறில் இருந்து 20 நிமிடங்களில் உரிய ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.

மட்டுமின்றி மிக குறைந்த நேரத்தில் கழிவறைகளும் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு இருமுறை மொத்த ரயிலும் தூய்மைப்பணிக்கு அனுப்பப்படுகிறது. இது 20 முதல் 60 மணி நேரமாகும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சில நேரங்களில் குப்பைத்தொட்டியை கழிவறையாகவும் பயணிகள் பயன்படுத்தி இருப்பது பார்வைக்கு வரும் என கூறும் நிர்வாகிகள், அவ்வாறான சூழலில் மருத்துவ ரீதியாக தூய்மைப்பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

BLS ரயில்களில் இருந்து ஆண்டுக்கு சுமார் 300 டன் குப்பைகளும் சுமார் 80 டன் காகித குப்பைகளும் சேகரித்து அகற்றப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் பயணிகள் ரயிலில் விட்டுவிட்டு செல்வது அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

பெரும்பாலான பயணிகள் சட்டத்தை மதித்து குப்பைகளை ரயிலில் விட்டுச் செல்வதை தவிர்த்து வருவது பாராட்டுதலுக்கு உரியது எனவும் BLS நெட்வொர்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்