சூரிச் ரயில் நிலையம் அருகே பெரும் தீ விபத்து: சகஜ நிலைக்கு திரும்பும் போக்குவரத்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது சில இடங்களில் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 2.16 மணியளவில் அந்த கட்டிடத்தில் தீப்பற்றியதாக தீயணைப்புத் துறைக்கு தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின. வானில் பல மீற்றர்கள் உயரத்திற்கு தீப்பிழம்புகள் தெரிவதை நகரின் பல பகுதிகளிலிருந்தும் காண முடிந்தது.

காலை சுமார் 4 மணியளவில் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தபடியால் அதில் யாரும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

தீயணைப்புப் படையினரின் கடுமையான போராட்டத்தால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டாலும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலையிலேயே நகரின் சில இடங்களில் போக்கு வரத்து சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்