சுவிஸ்ஸில் குறுகிய தூர விமான சேவைக்கு தடையா? வெளியான பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குறுகிய தூர உள்ளூர் விமான சேவை என்பது தேவையற்றது எனவும், அது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பாஸ்ஸில் நகர கிரீன் கட்சி தலைவர் Bálint Csontos தெரிவித்துள்ளார்.

விமான சேவை நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் சுற்றுச்சூழல் தொடர்பான செயற்பாடுகளில் நாம் தொடர்ந்து தோல்வியை எதிர்கொள்வதாகவும் Bálint Csontos தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்களை சுமார் 52 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

கடந்த 2000 ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இது 49 விழுக்காடு அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ்ஸில் இருந்து புறப்பட்ட அல்லது வந்திறங்கிய விமானங்களின் எண்ணிக்கை 1.4 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 55 மில்லியன் பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, சுவிட்சர்லாந்தில் மட்டும் ஒருநாளுக்கு சுமார் 50 விமானங்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே உள்ளூர் விமான சேவையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதற்கு சுவிஸ் அரசியல்வாதிகளிடையே இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளது. சிலர், ரயில் சேவையை மேலும் விரிவு படுத்தலாம் எனவும், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கலாம் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும், விமான எரிபொருளுக்கான வரியை அதிகரித்தால் விமான கட்டணங்களும் அதிகரிக்கும், அப்போது தானாகவே பயணிகளின் எண்ணிக்கை சரிவடையும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்