சூரிச் தெருக்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண கலைஞர்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மதிய உணவு இடைவேளைக்காக அலுவலகங்களை விட்டு வெளியே வந்தவர்கள், சுற்றுலாப்பயணிகள், பள்ளிச் சிறுவர்கள் என பலதரப்பட்டோரும் சூரிச் தெரு ஒன்றில் திடீரென ஒரு பெண் உடைகளை களைவதைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டனர்.

பின்னர்தான் தெரியவந்தது அது Katharina Vogel என்னும் நிர்வாணக் கலைஞர் என்று.

Rathausbrücke பாலத்தில் நடைபெற்ற அந்த சம்பவம் சுவிட்சர்லாந்தின் உடல் மற்றும் விடுதலை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றதாகும்.

ஞாயிறு வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் ஐரோப்பா முழுவதிலுமிருந்து வரும் 18 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

திடீரென இப்படி ஒரு காட்சியைக் கண்டதும் பார்வையாளர்கள் அங்கிருந்து செல்வதா இல்லை நின்று பார்ப்பதா என்று சற்று நேரம் குழம்பிப் போயினர்.

பலதரப்பட்டோர் வெவ்வேறு கருத்துக்களையும் தெரிவித்தனர். இது காட்டுத்தனமானது, பல குடும்பங்களும் சிறுவர்களும் இந்த பாலத்தைக் கடந்து செல்கிறார்கள்.

பாலியல் கல்வி குறித்து பிள்ளைகளுக்கு பள்ளியிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அப்படியிருந்தும் இது தேவையா? என ஒருவர் கோபக்குரல் எழுப்பினார்.

இரண்டு இளம்பெண்கள் இத்தகைய அனுபவங்கள் அத்தியாவசியமானதுதான் என்றாலும், அனைத்து ஆண்களும் தங்கள் கெமராக்கள் மற்றும் மொபைல் போன்களுடன் அவர்களை சூழ்ந்து கொண்டதுதான் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தது என்று கூறினர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers