சுவிஸ் ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தொலைதூர ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இலவச இணைய சேவை வழங்கப்படும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் கொண்டுவரப்படும் என அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், பொது போக்குவரத்து சேவைகளில் இலவச இணைய சேவையை கொண்டுவர வேண்டும் என கிறித்துவ ஜனநாயக அமைச்சர் தாமஸ் அம்மான் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அப்போது ரயில்களில் இலவச இணைய சேவைக்காக WLAN-ஐ பயன்படுத்துவது மிகவும் விலையுயர்ந்தது என்ற கருத்து, சுவிஸ் பெடரல் ரயில்வே சார்பில் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொலைதூர ரயில்களில் இலவச இணைய வசதி செய்து தரப்படும் என்று SBB அறிவித்துள்ளது.

இதனை வரவேற்றுள்ள அமைச்சர் தாமஸ் அம்மான், அரசின் இந்த பதில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ரயில்வே அதிகாரி மீதான SBB-யின் இணக்கம் மற்றும் அழுத்தங்களை கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்