ஜெனிவா வானவேடிக்கை நிகழ்ச்சியில் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியின் இடையே பொலிஸார் ஒருவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு பரிதாபமாக சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிவா நகர ஏரிக்கரையில் கடந்த சனிக்கிழமையன்று கோலாகலமாக வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த கண்கவர் நிகழ்ச்சியில் 400,000 பொதுமக்கள் கலந்துண்டு கண்டுகளித்தனர்.

வானவேடிக்கையும் இசைக்கு ஏற்றவாறு வானில் மோதி, கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமான வெளிச்சத்தை உண்டாக்கியது. நன்றாக நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தாலும், இறுதியில் ஒருசில நபர்களால் பெரிய சண்டை ஏற்பட்டது.

சண்டை முடிந்த சில மணி நேரம் கழித்து பலத்த காயங்களுடன் பொலிஸார் ஒருவர் மட்டும் சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் குறித்து தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers