இந்தோனேஷியா நிலநடுக்கம்: உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் ஏஜென்சி

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து

இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லாம்போக் தீவு, தொடர் நிலநடுக்கத்தால் 10 இன்ஞ் உயர்ந்துள்ளதாக இந்தோனேஷியா தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி 300,000 CHF -யை நிதியுதவியாக அளித்துள்ளது.

இந்த தொகை அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாம்போக் தீவில் 100க்கும் மேற்பட்ட சுவிஸ் பிரஜைகள் சிக்கிக் கொண்ட நிலையிலும், யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers