சுவிட்சர்லாந்தில் பார்மசி அருங்காட்சியகத்தில் நச்சுப்பொருள் தாக்குதல்: ஒருவர் மரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் அமைந்துள்ள பார்மசி அருங்காட்சியகத்தில் நச்சுப்பொருட்களை கையாண்ட ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸல் நகரில் அமைந்துள்ளது பார்மசி அருங்காட்சியகம். இங்கிருந்து வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு சென்றுள்ளது.

தகவலறிந்து விரைந்து சென்ற அவசர உதவிக்குழுவினர் குறித்த அருங்காட்சியகத்தில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊழியர் ஒருவரை மீட்டுள்ளனர்.

ஆனால் முதலுதவி அளித்து ஆம்புலன்சுக்காக காத்திருக்கும் நிலையில் அவர் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே அந்த அருங்காட்சியகத்தில் பணியாற்றிய மேலும் மூன்று ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், அவர்களை உடனடியாக குளிக்க வைத்துள்ளனர்.

இதனால் அவர்கள் ஆபத்தில் இருந்து தப்பியதாக அங்கிருந்த மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு பாஸல் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், தொழிற்சாலைகளுக்கான சிறப்பு மீட்பு குழுவினர், வேதியியல் ஆலோசகர் குழுவினர் என பலரும் சம்பவப்பகுதிக்கு விரைந்தனர்.

தற்போது சம்பவம் நடந்த அருங்காட்சியகத்தின் முக்கிய மூன்று பகுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நிபுணர்களால் கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் பாஸல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் நச்சுப்பொருள் தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...