சுவிட்சர்லாந்தில் வானவேடிக்கைக்கு தடை: காரணம் வெளியானது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திம் பெரும்பாலான மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டங்களில் வானவேடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மாகாணங்களில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. மட்டுமின்றி காட்டுத்தீ பரவும் ஆபத்தும் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு வானவேடிக்கை எதுவும் கூடாது என சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான மாகாணங்கள் தடை விதித்துள்ளன.

மாகாணத்தின் பல்வேறு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சோலோதுர்ன் மாகாணத்தில் வானவேடிக்கை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஸல் மாகாணத்தில் திங்களன்று மாலை முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்காயூ மாகாணத்தில் பொதுவெளியில் வானவேடிக்கை கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.

இதே போன்று Zug, Obwalden, St. Gallen, Thurgau என பெரும்பாலான மாகாணங்களில் தடை உத்தரவு அமுலில் உள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்