சுவிஸ்ஸில் வேலை செய்யாமல் 100,000 பிராங்குகள் ஊதியமாக பெற்ற அரசு வழக்கறிஞர்: அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பணி நேரத்தை நீட்டித்தும், பல மணி நேரம் வீணடித்த குற்றத்திற்காக அரசு வழக்கறிஞரை பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார் 56 வயது நபர். இவர் பணி நேரத்தை வீணடித்ததாக புகார் எழுந்தது.

மட்டுமின்றி வேலை ஏதும் செய்யாமல் மாதம் 11,000 பிராங்குகள் ஊதியமாகவும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தரவுகளில் மோசடி செய்ததாகவும், பணி நேரத்தை வீணடித்ததாகவும் கூறி துறை ரீதியாக அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையில் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் உண்மையென உறுதியான நிலையில் அவரை 10 மாதங்கள் இடைநீக்கம் செய்து சூரிச் அரசாங்கக் கவுன்சில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வரி செலுத்தும் பொதுமக்களின் பணத்தில் சுமார் 100,000 பிராங்குகள் அவர் வீணடித்ததாகவும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், பல ஆயிரம் பிராங்குகள் அபராதமாக அவர் செலுத்த நேரலாம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி சுமார் 70 நாட்கள் அவர் பணி செய்தது தொடர்பாக போலியான தரவுகளை சமர்ப்பித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவாரா அல்லது தற்காலிக தண்டனை மட்டும்ற் வழங்கப்படுமா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers