இறக்குமதி தடை செய்யப்பட்டால் சுவிஸ் மக்களுக்கு இதுதான் நிலையா? அதிர்ச்சி ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்கு பொருட்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டால் நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்கும் என்றாலும் அவர்களுக்கு எடை இழப்பு நேரிடும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாளொன்றிற்கு 3,015 கலோரிகள், உணவின் மூலம் பெறும் மக்கள் அப்போது 2,340 கலோரிகள் மட்டுமே பெறவேண்டியிருக்கும் என சுவிஸ் விவசாய, ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இனி மக்கள் தங்கள் புதிய உணவு முறைக்கு பழக வேண்டியிருக்கும். இறைச்சி உணவில் பெரிய மாற்றம் ஏற்படும்: பன்றி இறைச்சி, கோழிக்கறி ஏன் முட்டைகளைக் கூட உணவுத் தட்டில் பார்க்க முடியாத சூழல் ஏற்படும்.

உணவில் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெயின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியிருக்கும்.

ஆனால் அதற்கு பதிலாக காய்கறிக் கூடைகளில் உருளைக் கிழங்குகளும், பேக் (Bake) செய்யப்பட்ட உணவுகளும், உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளும் நிறைந்திருக்கும்.

சீஸ் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுவதற்கு பதில் பால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

விலங்குகளுக்கு காய்கறிகளைக் கொடுத்து அவற்றை வளர்த்து உணவாகப் பயன்படுத்துவதற்கு பதில் நேரடியாக காய்கறிகளை உணவாகப் பயன்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்