ஏற்றுமதியில் அசுர வளர்ச்சியை எட்டிய சுவிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 2018 ஆம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் ஏற்றுமதி அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது காலாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 55.7 பில்லியன் பிராங்குகள் ஏற்றுமதியில் ஈட்டியுள்ளதுடன், புது சாதனையும் படைத்துள்ளது.

மருந்து பொருட்கள், இயந்திரங்கள், துல்லியமான கருவிகள் மற்றும் கடிகார தயாரிப்பு உள்ளிட்ட துறைகள் ஏற்றுமதியில் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளன.

குறிப்பாக சீனா, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் மட்டும் அதிக ஏற்றுமதி நடைபெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி தங்க நகைகள், கார்கள், உணவு, குளிர்பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் துறைகளும் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளன.

மருந்து பொருட்களின் ஏற்றுமதியே மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகவும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது சுமார் 42 விழுக்காடு சுவிட்சர்லாந்தில் இருந்தே நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மருந்து பொருட்கள் தயாரிப்பில் தலைசிறந்து விளங்கும் நோவார்டிஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் மட்டும் 7.8 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியுள்ளது.

மட்டுமின்றி பிரான்சில் செயல்பட்டுவரும் சுவிஸ் தங்க நகை நிறுவனங்கள் இரண்டாம் காலாண்டில் மட்டும் 598 மில்லியன் பிராங்குகள் வருவாய் ஈட்டியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்