சுவிஸ் விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜூலை 23ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் சங்கமான Skycontrol மற்றும் Geneva, Sion, Bern மற்றும் Lugano விமான நிலையங்களில் விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனமான Skyguide ஆகியவை நேற்றையதினம் மீண்டும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கின.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றில் வேலை நிறுத்தம் இருக்காது என Skycontrol தெரிவித்துள்ளது.

ஒரு வாரம் முன்பு Skyguide அறிமுகம் செய்த ஊழியர்கள் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்றில் ஊழியர் சங்ககங்களில் முக்கால் வாசிப்பேர் கையெழுத்திட்ட நிலையில் Skycontrol மட்டும் கையெழுத்திடவில்லை.

Skycontrol 125 நாட்கள் வருடாந்திர விடுப்பும் மூன்றாண்டுகளில் 1.8 சதவிகித வருடாந்திர ஊதிய உயர்வும் கோரியது.

இந்நிலையில் திடீரென வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக Skycontrol தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், Geneva, Sion, Bern, Lugano, Emmen மற்றும் Granges விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்