சுவிஸ்ஸில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 58 வயது பெண்மணி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலை ஊக்குவித்த தாய்லாந்து பெண்மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் தொழிலை ஊக்குவித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 58 வயது தாய்லாந்து பெண்மணிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த பெண்மணி தாய்லாந்தில் இருந்து கல்வியறிவற்ற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய இளம்பெண்களை சுவிட்சர்லாந்துக்கு சட்டவிரோதமாக அழைத்து வருவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

பின்னர் அவர்களை வைத்து சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த தாய்லாந்து பெண்மணியை கைது செய்தது.

2009 ஆம் ஆண்டில் இருந்தே இவர் இந்த தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது 10 நாட்கள் நீண்ட விசாரணையின் முடிவில் குறித்த பெண்மணி மீது 75 பிரிவுகளில் வழக்கு பதிந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழில் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட வர்த்தகம் என்ற போதும், ஆட்கடத்தல், நிர்பந்தித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் தூண்டுதல் உள்ளிட்டவை சட்டவிரோதமாகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...