சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் திருமணமான பெண்களின் கருக்கலைப்பு: எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 30 வயதை தாண்டிய பெண்களின் கருக்கலைப்பு விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்தே இளம்பெண்களின் கருக்கலைப்பு விகிதம் வியப்பளிக்கும் வகையில் சரிவை கண்டிருக்கும் நிலையில்,

30 வயதை கடந்த பெண்களின் கருக்கலைப்பு விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளதாக உள்ளூர் நாளேடு ஒன்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இது பெரும்பாலும் போதிய வருவாய் இல்லாத பெண்கள், படிப்பறிவற்றவர்கள்ம் மற்றும் இளம்வயது பெண்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது என தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 30 முதல் 40 வயதுடைய பெண்களின் கருக்கலைப்பு எண்ணிக்கையானது 3669 ல் இருந்து 4166 என அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மிக தாமதமாக கருத்தரிப்பதும், இப்போதே குடும்ப சுமையை எதிர்கொள்ள வேண்டுமா என்ற எண்ணமுமே பெரும்பாலான கருக்கலைப்புக்கு முக்கிய காரணம் என சூரிச் நகர பெண் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பெர்ன் மாகாண பல்கலைக்கழக மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் மூன்றில் ஒருபகுதி பேர் திருமணமானவர்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி பெண்கள் தற்போது சர்வசாதாரணமாக டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி வருவதாகவும், இதனாலும் கருக்கலைப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும் பெண்கள் ஏற்கெனவே தாயானவர்கள் என்பதால், வேறு பிரச்னைகளில் சிக்காமல் இருக்க கருக்கலைப்பு செய்து கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிள்ளைகள் என்பது பொருளாதார ரீதியாக பெருஞ்சுமை என சமூகம் அவர்களுக்கு அளித்த பாடம் கூட கருக்கலைப்புக்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers