சுவிட்சர்லாந்தில் உச்சம் தொடும் விலைவாசி: ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவில் விலைவாசி உச்சத்தில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 2-வது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் நுகர்வோர் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைவிடவும் 59 விழுக்காடு விலை அதிகம் என தெரியவந்துள்ளது.

இதில் உணவு பண்டங்களுக்கான விலை என்பது மிக மிக அதிகம் எனவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு விலை அதிகரித்து வந்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒப்பிடுகையில் 68 விழுக்காடு அதிகமாகும்.

உணவுப் பொருட்களின் விலை மட்டுமல்ல, ஆயத்த ஆடை உள்ளிட்ட துணிவகைகளும் 53 விழுக்காடு சுவிட்சர்லாத்தில் அதிகமாகும்.

மட்டுமின்றி ஹொட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவையும் எஞ்சிய நாடுகளை ஒப்பிடுகையில் 63 விழுக்காடு அதிகமெனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் மின்சாரம் உள்ளிட்ட எரிபொருட்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைவிடவும் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...