பறவைகளை பயமுறுத்தியவருக்கு சுவிட்சர்லாந்து அளித்த தண்டனை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ராட்சத ஹாட் ஏர் பலூனில் பயணித்த ஒருவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்தியதற்காக 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

St Gallen பகுதியிலுள்ள Kaltbrunner Riet இயற்கை சரணாலயத்தின் அருகிலிருந்து அவர் தனது ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பினார்.

அது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி. அதை அவர் கவனிக்கவில்லை என்று கூறிய நிலையிலும் அவருக்கு 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பும்போது ஒரு மான் பயந்து ஓடியதாகவும், ஏராளமான வாத்துகளும் காட்டு வாத்துகளும் அன்னப்பறவைகளும் மிரண்டு பறந்து சென்றதாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சாட்சியமளித்ததாக St Gallen பகுதி அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Kaltbrunner Riet இயற்கை சரணாலயம் இரண்டாவது முறையாக இத்தகைய வழக்கைச் சந்திக்கிறது.

2017ஆம் ஆண்டின் இறுதியில் திருமண வீடியோ ஒன்றை எடுக்கும்போது மணப்பெண் குதிரையின்மீது பயணிப்பதுபோல காட்சி ஒன்றை எடுத்ததற்காக அந்த தம்பதிக்கு 400 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏனென்றால் அந்த பகுதியில் குதிரையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த படக்குழுவின் இயக்குநருக்கு 550 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...