முதன்முறையாக ஹெச்.ஐ.வி சுய பரிசோதனை செய்ய அனுமதி: சுவிட்சர்லாந்து அரசு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
126Shares
126Shares
lankasrimarket.com

இன்று முதல் சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக ஹெச்.ஐ.வி சுய பரிசோதனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.

அத்துடன் இந்த சோதனை செய்ய உதவும் உபகரணங்கள் தற்போது நாடு முழுவதும் மருந்தகங்களிலும் இணையம் மூலமாகவும் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஹெச்.ஐ.வி சோதனை செய்ய வேண்டுமானால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவதுறையிலுள்ள ஒருவரால் மட்டுமே அதை செய்து கொள்ள முடியும்.

தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அந்நோயை உண்டாக்கும் கிருமியின் கண்டுபிடிப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகவும் சுகாதார அலுவலகமும் பாலியல் நலத்திற்கான ஃபெடரல் கமிஷனும் பொதுமக்களே இச்சோதனைகளை செய்து கொள்ள சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளோரில் ஐந்தில் ஒருவர் தாம் ஹெச்.ஐ.வி கிருமியை சுமப்பதை அறியாமலிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது ஹெச்.ஐ.வி சோதனை செய்ய உதவும் உபகரணங்கள் நாடு முழுவதும் மருந்தகங்களிலும் இணையம் மூலமாகவும் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உபகரணத்தில் ஒரு சிறு ஊசியால் விரல் நுனியில் குத்தி எடுக்கப்படும் அளவு இரத்தமே ஹெச்.ஐ.வி நோயைக் கண்டுபிடிக்க போதுமானது.

ஒவ்வொரு உபகரணத்துடனும், ஒரு வேளை சோதனை ”பாஸிட்டிவ்” என்று வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உபகரணம் மூலம் 30 நிமிடங்களுக்குள் ஹெச்.ஐ.வி இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.

தங்கள் நோய் நிலை குறித்து அறியாமலிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இது உதவும் என ஒரு தரப்பினர் கூறினாலும் அதை எதிர்ப்பவர்கள் இந்த சோதனை மருத்துவத் துறையிலுள்ள நிபுணர்களால்தான் செய்யப்பட வேண்டும் என்றும் பயன்படுத்தும்போது ஏற்படும் சிறு பிழைகள் கூட தவறான “ரிசல்ட்டை” கொடுக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்