திருமணமான ஜோடிகளுக்கு வரி விதிப்பு: சுவிட்சர்லாந்தில் மறு வாக்குப்பதிவுக்கு கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
106Shares

சுவிட்சர்லாந்தில் திருமணமான ஜோடிகள் அதிக வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிறிஸ்தவ ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 50.8 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனால் குறித்த கோரிக்கையை அரசு நிராகரித்தது. ஆனால் இது அரசின் தவறான பிரச்சாரத்தினால் ஏற்பட்ட விளைவு என குற்றஞ்சாட்டியுள்ள கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மீண்டும் ஒரு பொதுவாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அதிக வரிச்சுமையால் பாதிக்கப்படும் திருமணமான ஜோடிகள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையானது தவறு எனவும், சுவிட்சர்லாந்தில் உள்ள 1.5 மில்லியன் திருமணமான ஜோடிகளில் சுமார் 80,000 பேர் அதிக வரிச்சுமை அனுபவித்து வருவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக வரிச்சுமை அனுபவிப்பது வெறும் 454,000 ஜோடிகள் மட்டுமே எனவும் சுமார் 324,000 ஜோடிகள் அரசின் திருமண ஊக்கத்தொகையை அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் உள்ள Aargau, Bern, Basel Country, Solothurn, Vaud, Valais, Zug, மற்றும் Zurich உள்ளிட்ட 8 மாகாணங்களில் இருந்தும் மறு வாக்குப்பதிவு கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்