சுவிட்சர்லாந்தில் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய ரயில் சேவை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
158Shares

சுவிட்சர்லாந்தின் நான்காவது பெரிய ரயில் நிலையமான Winterthurஇல் மீண்டும் ரயில் சேவை சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

கூட்ஸ் ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து வார இறுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

ரயில் தடம் புரண்டதால் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை போக்குவரத்தில் பாதிப்பு இருக்கலாம் என நேற்று ரயில்வே துறை அறிவித்திருந்தது.

ஆனால், நீண்ட தொலைவு செல்லும் ரயில்கள் சில நேற்று மதியமே இயங்கத் தொடங்கி விட்டன.

ஞாயிறு காலை நிலவரத்தைக் காட்டு வகையில் ரயில்வே துறை ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தது.

சிக்கலான பிரச்சினை என்பதால் சரி செய்வதற்கு நேரம் பிடிக்கும் என்றும் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அறிவித்திருந்தது.

ஜல்லி கொண்டு சென்ற அந்த கூட்ஸ் ரயில் வெள்ளியன்று தடம் புரண்டது. ஒரு மின் கம்பம் வேறு பாதிக்கப்பட்டதால் சற்று நேரத்திற்கு மின் வெட்டு ஏற்பட்டது.

மூன்று பெட்டிகள் பாதிக்கப்பட்டன, ஆனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே ரயில் சேவை மீண்டும் சகஜ நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்