சுவிட்சர்லாந்தில் மாணவிகளை கோபப்படுத்திய உடை கட்டுப்பாடு: பதிலுக்கு செய்த செயல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
488Shares
488Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் பெர்னிலுள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் பாலுணர்வைத் தூண்டும் வகையில் உடை உடுத்த வேண்டாம் என்று பள்ளி பிரின்சிபல் அனுப்பிய இ - மெயில் மாணவிகளை கோபப்படுத்தியதால் பதிலுக்கு அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அறிவிப்புப் பலகை ஒன்றை வெளியிட்டும் வேண்டுமென்றே மோசமாக உடை உடுத்தியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Gymnasium Oberaargau பள்ளியின் முதல்வரான Barbara Kunz, மாணவிகள் தங்கள் பாதுகாப்புக்காகவும் மற்றவர்களை மதிக்கும் வகையிலும் இன்னும் கொஞ்சம் உடலை மறைக்கும் வகையில் உடை உடுத்துமாறு இ - மெயில் ஒன்றை மாணவிகளுக்கு அனுப்பினார்.

ஸ்ட்ராப் இல்லாத மேலாடை மற்றும் எப்போதும் வெளியே தெரியும் வகையிலான உள்ளாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. நீங்கள் ஊர் சுற்றுவதற்கோ அல்லது நீச்சல் குளத்திற்கோ செல்லவில்லை, பள்ளிக்கு செல்கிறீர்கள் என்று அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தி மாணவிகளை கோபப்படுத்தியதோடு அதில் மாணவர்களின் உடைக் கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறப்படாததால், அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அவர்கள் பாத்ரூம் அருகில் ஒரு அறிவிப்பு ஒன்றை அவர்கள் வெளியிட்டனர்.

அதில், பெண்களை அவர்களது உடலுக்காக அவமானப்படுத்துவதற்கு பதிலாக பையன்களுக்கு பெண்கள் பாலியல் பொருட்கள் அல்ல என்று கற்றுக் கொடுங்கள்.

எங்கள் தொடைகள், கால்கள், உள்ளாடைகள் மற்றும் வயிறு ஆகியவை ஆண்களின் கவனத்தை சிதறச் செய்வதற்காக அல்ல, அவை எங்கள் உடலின் ஒரு பாகம் மட்டுமே என்று எழுதப்பட்டிருந்தது.

அதுவரை ஒழுங்காக உடை உடுத்திய பெண்கள் கூட அந்த இ - மெயில் வந்த பிறகு மோசமாக உடை உடுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இதையறிந்த முதல்வர், தனது செய்தியில் கட்டுப்பாடுகள் குறித்தோ தண்டனை குறித்தோ எதுவும் கூறப்படவில்லை என்று கூறியதோடு, பெண்கள் தங்களைக் குறித்து வெளிப்படுத்தும் அபிப்பிராயத்தை நோக்கி அவர்கள் கவனத்தைத் திருப்புவதற்காகவே இந்த உடை குறித்த பரிந்துரைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்