அயல்நாட்டு சூதாட்ட தளங்களுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
129Shares
129Shares
lankasrimarket.com

சூதாட்ட பழக்கத்திற்கு இளைஞர்களை அடிமையாக்கும் அயல்நாட்டு சூதாட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்கும் மசோதா ஒன்றிற்கு சுவிஸ் வாக்காளர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.

புதிய சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆதரவாக 72.9 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்களிக்கும் தகுதியுடைய வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சுதந்திரத்தை இந்த சட்டம் மீறுவதாக எதிர்ப்பாளர்கள் அதை எதிர்த்து 50,000 கையெழுத்துகளை பெற்றும் அவர்கள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

ஏற்கனவே சூதாட்டத்திற்கு எதிரான சட்டம் இருந்தாலும் தற்போது டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றாற்போல் அதில் மற்றங்கள் செய்யப்படுவதாக சுவிஸ் அரசு கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு அமுலுக்கு வர இருக்கும் இந்த சட்டம் ஐரோப்பிய சட்டங்களிலேயே கடுமையானது என கருதப்படுகிறது.

மேலும் இந்த சட்டத்தின்படி சுவிட்சர்லாந்தில் அனுமதி பெற்ற உள்ளூர் சூதாட்ட விடுதிகள் மட்டுமே, ஆன்லைன் உட்பட, இயங்க அனுமதிக்கப்படும்.

இச்சட்டம் முதன்முறையாக ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிப்பதோடு அந்நிய நாட்டு நிறுவனங்களை தடை செய்யும்.

இச்சட்டம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் எதிர்ப்பாளர்கள் அது இணைய சென்சாருக்கு சமம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்