சுவிஸில் வழக்கும் ஊடகவியலாளர் சந்திப்புகளும் 2018

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சனவரிமாதத்திலிருந்து பெப்பிரவரி மாதம் வரை,ஈழத்தமிழருக்கு எதிரான ,”இராட்சதநடைமுறை” என்றழைக்கப்பட்ட ஒரு வழக்கு, சுவிட்சலாந்து நாட்டின் பெலின்சோனா என்னும் இடத்திலுள்ள நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் 13 பேர்கள் மேல், நிதி சேகரிப்பு சார்ந்த பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. பயங்கரவாத அமைப்புக்கு நிதிசேகரித்தது என்பதும், இறுதி போருக்கு நிதி அனுப்பியதாலேயே போர்நீடித்து அதிகமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் ஈழத்தமிழர்கள் மேல்சுமத்தப்பட்ட அதிகம் கவனத்தை ஈர்க்கும் இரு குற்றங்கள்.

விடுதலைப்புலிகளை பயங்காரவாத அமைப்பு என்று மேற்கு நாடுகள் விமர்சிப்பது தமிழர்களுக்கு ஒன்றும்புதிதல்ல. இந்தவழக்கிலும் அரசு தரப்பு வழக்கறிஞர், இவ்வாறு தான் வாதிட்டார்.

விடுதலைப்புலிகளை இன்று வரை தடை செய்யாத சுவிட்சலாந்து நாட்டிலும், இன்று விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லையென்றான பின்னரும், இவ்வாறு வழக்குகளில் வாதிக்கப்படுவது சிந்திக்கவைக்கிறது.

நிதி அனுப்பியதாலேயே போர்நீடித்து அதிகமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று வாதிடுவது எப்படிஇருக்கிறதுதெரியுமா? அன்றும் சரி இன்றும்கூட, ஒரு இளம் பெண்பாலியல் வன்முறைகுற்றத்துக்கு ஆளாக்கப்பட்டால், இப்பெண்ணின் மேலும், அவர் நடத்தையிலும் குற்றம் கண்டுபிடிக்கும் ஒரு கலாச்சாரம்உண்டு.

நிதிகொடுத்ததால் அதிகமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று வாதிடுவதும் இது போலத்தான். குற்றவாளியை காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் மேல் குற்றம்கண்டுபிடிப்பது மேலாண்மைவாதம்.

இவ்வழக்கை இரண்டு எதிரெதிரான கோணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். தமிழர்களின் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், சுதந்திர தாயகத்தை அமைப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதும் என்றும் மாறாக இதை ஒரு கிரிமினல் குற்றமாக அல்லது பயங்கரவாதமாக புரிந்து கொள்ளலாம்.

தமிழருக்கு எதிரான இனவழிப்புக்கும், மூலகாரணமாக இருப்பது, சிறிலங்காவை மேற்குலக சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தெற்காசியாவையும் இந்திய பெருங்கடலையும் ஆளவேண்டும் என்ற எண்ணமே ஆகும்.

சுவிட்சலாந்து வழக்கிலும் இனவழிப்பிற்கான இந்த அடிப்படை நோக்கம் மறைந்து கிடக்கிறது. அதன் ஒவ்வொரு செயலிலும் இதை உணர முடிகிறது.

பிரித்தானியாவும், பிரான்சும், 19ம் நூற்றாண்டில் இலங்கை தீவுக்காக போட்டி போட்டன. இதற்கு தெளிவான காரணம் இருந்தது. ஆழமான திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், இந்துசமுத்திரத்தில் உள்ள ஒரேயொரு ஆழமான துறைமுகம் இதுவென்பதையும், அட்மிரல் நெல்சன், வெளிப்படையாகவே பேசினார்.

பிரித்தானியாவுக்கு இதைவிட இன்னுமொரு காரணமும் இருந்தது. இந்தியாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு துறைமுகமாகவும் இது இருந்தது.

திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் வெளிப்படையாக மீண்டும்இரண்டாம் உலக போரின் போது சொல்லப்பட்டது.

ஜப்பான் இப்போரின் முதலாவது கட்டத்தில் வெற்றிபெற்றபோது, பிரித்தானிய காலணியாளர்கள், பர்மாவிலிருந்து அவர்களின் வளங்கள் யாவற்றையும் சிறிலங்காவுக்கு மாற்றினார்கள்.

திருகோணமலையிலிருந்தே, இவர்களின் போர்அரங்கங்கள் எங்கும், பசுபிக் பிராந்தியம் உட்பட, பதில் தாக்குதல்களை செய்தார்கள்.

பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்த போது, விடுதலைக்கான வன்முறைகள் இல்லாமல் சுதந்திரம் பெற்றதன் பின்னணியில், எதிர்கால பிரச்சனைகளின் விதைகள் இருந்தது. இவ்வாறு வன்முறைகள் அதிகம் இல்லாமல் சுதந்திரம் பெற்றது, தொடர்ந்தும் பிரித்தானியா இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் பெறப்பட்டது.

சிறிலங்கா அரசாலும், அதற்கு பிரித்தானியா பல வழிகளில் நீண்டகாலமாக கொடுத்த ஆதரவுகளாலும், தமிழர்களின் போராட்டத்தை அழிக்க முடியவில்லை. தமிழர்களின் பலமே இறுதியில் 2002 இலிருந்து 2006 வரையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தது.

இக்காலத்தின் முக்கியமான விடயம் என்னவென்றால், ஐக்கிய-அமெரிக்கா உட்பட வல்லரசுகள், சிறிலங்கா ஒற்றையாட்சில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டன.

ஐக்கிய-அமெரிக்கா, கவுதமாலாவில், நடத்தியது போன்ற, ஒரு பெரும்போர் இங்கும்தேவையென்று முடிவு செய்தன. வேறு வழியில் சொல்வதானால், விடுதலைப்புலிகளை தோற்கடிக்க அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்தை அழிக்க வேண்டும் என்பதே.

சுவிட்சலாந்து வழக்கில் நாம் காண்பதெல்லாம் இந்தஇனவழிப்புமனநிலையின் நீட்சியே. ஒரு இனவழிப்பு மனநிலையே இவ்வழக்குக்கும் அதன் வாதங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.

இறுதிக்கட்டப்போரின் போது, படு கொலைகளை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சிகளில் ஈடுபட்ட ஈழத்தமிழ் அரசியல்வாதி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, நீண்டகாலமாக தமிழருக்காக வாதாடிய சிவிஸ் நாட்டின் வழக்கறிஞர், மார்சல் பொஸோநெட், 2013 இல், பிரேமனில் இடம்பெற்ற சிறிலங்கா பற்றிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் வழக்கறிஞராக பணியாற்றிய அன்டிஹிகின் பொத்தம் ஆகியோர் பங்குபற்றி இவ்வழக்கைப் பற்றி விளக்குவார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்