பேர்ண் மாநிலத்தில் வயோதிபர்களுக்கான ஒய்வூதியத்திட்டங்கள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம்பெறும் வழிமுறைகளுக்கான உதவிகள் ஓய்வூதிய காலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலம் பேணல் தொடர்பான ஆலோசனைகள் 25.05.2018 அன்று 9.30 மணிமுதல் 12.00 மணிவரை தமிழ்மொழியில் இடம்பெறவுள்ளது.

Schweizerisches Rotes Kreuz) நிறுவனமும், செஞ்சிலுவைச்சங்கம் Pro Senectut வயோதிபர்களுக்கான அமைப்பு அத்துடன் பேர்ண் மாநிலத்தில் வயோதிபர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் AHV நிறுவனத்தின் Gemeinsam in die Zukunft என்னும் திட்டமும் இணைந்து ஓய்வூதியகால நலன்களை தமிழ்மக்களுக்கும் வழங்கி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மூன்று கலந்துரையாடல்கள் வெவ்வேறு தலைப்புக்களில் நடைபெறுகின்றன.

பேர்ண் மாநிலத்தின் AHV நிறுவனத்தினால் Gemeinsam in die Zukunf என்னும் திட்டத்தின் மூலம் நடாத்தப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கற்கை நெறியினை நிறைவுசெய்து அதற்கான சான்றிதழினைப் பெற்ற காலத்தில் இருந்து, ஒவ்வொரு மாதமும் வயோதிபர்களுக்கான கலந்துரையாடலை சிறிய குழுக்களாக இணையர் நந்தினி முருகவேள் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

இக் கலந்துரையாடலில் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தல், அனுமதி அட்டையைப் பெற்றுக்கொடுத்தல், இவர்களின் நிதி நிலமையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுத்தல், போன்றவற்றுடன், ஏனைய சேவைகளையும் பற்றிக் கலந்துரையாடப்படுகின்றன.

திகதி : வெள்ளிக்கிழமை 25.05.2018
நேரம் : 9.30 – 12.00 (தேநீர் இடைவேளை உட்பட)
இடம் :Quartierzentrum im Tscharnergut(Tscharni) Waldmannstr17,3027 Bern, Bethlehem
உரையாடுபவர்கள்: Daniela Krebs und Anna Hirsbrunner Pro Senectute Region Ber
மொழிபெயர்ப்பு: Nanthinini Murugaverl
மேலதிகவினாக்களுக்கும்,தொடர்புகளுக்கும் :079 397 387 7

29.06.2018 வெள்ளிக்கிழமை பிற்பகலில் Schwabgu வயோதிபர் இல்லத்திற்கு செல்வதற்குதிட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் இக் கலந்துரையாடலில் வழங்கப்படும்.

இதற்குப்பொறுப்பாக Sibylle Vogt (Caritas),Nanthini Murugaverlபொறுப்பாக இருப்பார்கள்.

இக் கலந்துரையாடலானது தமிழில் நடைபெறும். இக் கலந்துரையாடலுக்கான அனுமதி இலவசம். முன்பதிவுகள் அவசியமில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்