சுவிஸில் செயற்கை பூச்சிக்கொல்லி உரத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் செயற்கை பூச்சிக்கொல்லி உரங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை வலுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் விவசாயத்திற்கு ஓர் ஆண்டிற்கு மட்டும் சுமார் 2,000 டன் செயற்கை பூச்சிக்கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விவசாயிகள் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை.

மாறாக, இந்த வகை செயற்கை பூச்சிக்கொல்லி உரங்கள் விலையுயர்ந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த ரசாயனங்கள் விவசாயம் மட்டுமின்றி, சுவிஸ் பெடரல் ரயில்வேயின் வழிதடங்களை சுத்தப்படுத்துவதிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சுவிஸில் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய வேண்டி சுமார் 1,00,000 பேர் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர்.

ஆனால், இதனை சுவிஸ் அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறைப்படுத்துவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்