சுவிஸ் வைரக் கொள்ளையர்கள் விடுவிப்பு: போதுமான ஆதாரம் இல்லையாம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் விமானம் ஒன்று பெல்ஜியம் விமான நிலையத்தில் நிற்கும்போது அதிலிருந்த பல மில்லியன் மதிப்புள்ள வைரங்களைத் திருடிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேரை போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி பெல்ஜியம் நீதிமன்றம் ஒன்று விடுதலை செய்தது.

திருட்டின் மூளையாகச் செயல்பட்ட மற்றொருவரின் நீதிமன்ற விசாரணை பிறிதொரு நாளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து வழக்கு இன்னும் தீவிரமடைந்துள்ளது.

அப்படியானால் பல மில்லியன் மதிப்புள்ள வைரங்களைத் திருடிச் சென்றவர் யார் என்னும் கேள்வி எழுந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்த முகமூடி அணிந்த எட்டு கொள்ளையர்கள் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுவிஸ் விமானம் ஒன்றிலிருந்த வைரங்கள் வைக்கப்பட்டிருந்த 120 பார்சல்களை திருடிச் சென்றனர்.

ஒரு முறை கூட துப்பாக்கியால் சுடாமலே 46 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புள்ள வைரங்களை அவர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்