கருணைக்கொலை செய்யப்பட்ட விஞ்ஞானியின் கடைசி வார்த்தை

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 104 வயது விஞ்ஞானி டேவிட் குடால் , உடல்நலக்குறைவு காரணமாக தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து சுவிட்சர்லாந்தில் கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருணை கொலை செய்யப்படுவதற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை கழித்துள்ளார். இவர் கடைசியாக சாப்பிட்ட உணவு மீன் மற்றும் சிப்ஸ் ஆகும்.

அதன்பின்னர், நாம் எதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என கேட்டுள்ளார். இதுதான் இவர் கடைசியாக பேசிய வார்த்தை. அதன்பின்னர், Liestal - இல் உள்ள தற்கொலை மையத்தில் சரியாக பிற்பகல் 12.30 மணிக்கு, நரம்பில் மருந்து செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவர் தனது உடலை மருத்துவத்திற்கு அல்லது தனது அஸ்தியை உள்நாட்டில் கரைக்க வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers