ஒரு துண்டு கேக் சாப்பிட்டு £ 5,650 பணத்தை இழந்த பெண்!

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கபாப் ஷாப்புக்கு சென்ற பெண்மணி ஒருவர் 5,650 பவுண்டினை டிப்ஸ்ஸாக கொடுத்ததை அறிந்து அவரே அதிர்ச்சியடைந்துள்ளார்.

Dietikon - இல் அமைந்துள்ள கபாப் ஷாப்புக்கு சென்ற Olesya Shemyakova, குளிர்பானம் மற்றும் சொக்லேட் கேக் துண்டு வாங்கியுள்ளார்.

இதன் விலை, 17 பவுண்ட்ஸ் ஆகும். இதற்கான பணத்தை கார்டில் செலுத்தியுள்ளார், கார்டை அழுத்தும்போது, மெஷினானது பொருட்களுக்கான தொகை மற்றும் டிப்ஸ்ம் கேட்டுள்ளது.

இவர் தனது பின் நம்பரை அப்டேட் செய்து பணத்தினை செலுத்திவிட்டு வந்துவிட்டார்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான், தனது கணக்கில் இருந்து 5,650 பவுண்ட்ஸ் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இவர், எனக்கு வேலைவாய்ப்பு கிடையாது, அதுமட்டுமின்றி எனக்கு டச்சு மொழி அவ்வளவாக தெரியாத காரணத்தால், மெஷின் எனது பின் நம்பரை கேட்டவுன் முதலில் நம்பரை பதிவு செய்தேன்.

ஆனால், இரண்டாவது முறையும் நம்பர் கேட்கப்பட்டது, பின்னரும் எனது ரகசிய நம்பரை பதிவுசெய்தேன்.

இதில் தான் தவறு நடத்திருக்க வேண்டும், எனது பணத்தினை எப்படியாவது கபாப்பில் இருந்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

கபாப் கடையின் உரிமையாளரும், இப்பெண்ணின் பணத்தினை திருப்பி கொடுத்துவிடுவோம் என்றும், அதில் எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...